தமிழ்நாட்டில் முதன் முறையாக காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை நடைமுறைப்படுத்த மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட ’வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம் அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. அதிலும் குழாய் இணைப்பு நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, ’திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,’ பணிகளை அந்த இயந்திரமே செய்து முடிக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில் ’வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியல் முதல் 32 டிகிரி செல்ஷியசிலும் ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில் திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும். மேலும்…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
அவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
Vijayakanth gets exemption from appearing in court சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில்…
Read Moreமதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி
Karunanithi blames Jayalaithaa for not constructing Maduravoyal Elevated high way சென்னை, ஆக. 13- : தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.…
Read Moreதீ பிடித்து எறியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடித்து எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் ராகுல். இக்குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில் இதுவரை 4 முறை தானாக தீப்பற்றியதால் கிராம மக்கள் இந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஸ்பான்டின் க்யூமன் கம்பன்ஷன் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இக்குழந்தையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து நாராயணபாபு கூறுகையில், குழந்தை ராகுலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குழந்தையின் வியர்வை, ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து வருகிறோம். எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் இவற்றை…
Read Moreஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
Sterlite to continue operations புதுடெல்லி, ஆக. 09: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியதால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக 29-ந் தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி சுவதேந்திரகுமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மே 31-ந் தேதி தீர்ப்பாய நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் 4 பேர் கொண்ட குழு ஆலையில் ஆய்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல்…
Read Moreசேரன் மகள் தாமினி விவகாரத்தில் அமிரின் அதிரடி தகவல்
சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சந்துரு குடும்பம் தொடர்பாக திடுக்கிடும் ஆதாரங்களை காட்டியுள்ளார். சேரனின் நண்பரும் இயக்குனருமான அமீர் ஆரம்பித்திலிருந்தே தாமினி காதல் விவகாரத்தில் சேரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார். இதனால் கோபமடைந்த சந்துருவின் சகோதரி கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிடுவதற்கு நீ யார் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அமீர் சேரனின் மகளும் என்னுடைய மகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் சந்துருவின் குடும்பமானது முழுக்க முழுக்க பணம் பறிக்கும் கும்பல். சந்துருவின் அக்கா பத்மா ராமநாதபுரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகியிருந்த இலியாஸ் என்பவரோடு ரகசியமாக குடும்பம் நடத்தி அவரை ஏமாற்றி அவரிடமிருந்து 200 பவுனுக்கும் அதிகமான நகை, ஆந்திராவில் வீடு, லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். இதற்காக அவர்களது மொத்தக் குடும்படும் முஸ்லிமாக மாறியுள்ளது, மேலும் சந்துரு மானாமதுரையில் ஒரு வசதியான வீட்டுப்…
Read Moreபிரதமர் மன்மோகன்சிங் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்
Prime minster Manmohan singh arrived Trichy புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார். Prime minster Manmohan singh arrived Trichy
Read Moreசேது சமுத்திர திட்டத்தால் தூத்துக்குடி வளர்ச்சி அடையாது: வை.கோ
No improvements can be made in Tuticorin implementing sethu canal: Vaiko தூத்துக்குடி : “”மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம்,” என, வைகோ தெரிவித்தார். தூத்துக்குடியில், ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, நான் முன்னிலையில் இருந்து செயல்பட்டேன். அப்போதைய சூழ்நிலைகள் வேறு. தற்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். கடல்வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச அளவிலான, பெரிய கப்பல்கள் வந்து செல்ல முடியாது. இத்திட்டத்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம். ஈழத்தமிழர் படுகொலையை திசை திருப்புவதற்காக, இப்பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இலங்கையில் “காமன்வெல்த்’ மாநாடு நடத்தக் கூடாது.…
Read Moreஆடிட்டர் ரமேஷ் கொலை: 4 பேர் கைது
4 accused arrested in auditor ramesh murder case நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த…
Read Moreமோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து: திருமாவளவன்
thirumavalavan signed in the memorandum against modi சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் நான் கையெழுத்துப் போட்டுள்ளேன். மோடிக்கு விசா தரவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. அதை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் எம்.பி.க்களிடையே கையெழுத்து வாங்கும் முயற்சி நடந்தது. கடந்த 18-12-2012 அன்று நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது கையெழுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட சில எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டனர். அதில் நானும்…
Read More