மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து: திருமாவளவன்

thirumavalavan signed in the memorandum against modi

சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் நான் கையெழுத்துப் போட்டுள்ளேன். மோடிக்கு விசா தரவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. அதை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் எம்.பி.க்களிடையே கையெழுத்து வாங்கும் முயற்சி நடந்தது. கடந்த 18-12-2012 அன்று நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது கையெழுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட சில எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டனர். அதில் நானும் கையெழுத்து போட்டேன். அதில் இருப்பது என்னுடைய கையெழுத்துதான். இந்த மாதிரி தடை விதிப்பதற்கான தார்மீக தகுதி அமெரிக்காவுக்கு கிடையாது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்த மாதிரி முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க அரசும் இலங்கை அதிபருக்கு வரவேற்பு அளித்தது. இருந்தாலும் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது வரவேற்க கூடிய ஒன்று என்பதால் நானும் கையெழுத்து போட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

thirumavalavan signed in the memorandum against modi

Related posts