Congress defends Digvijaya Singh’s remarks on Meenakshi Natarajan
காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி நடராஜன் 100 வீதம் கவர்ச்சியானவர் எனும் அர்த்தத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய திக் விஜய் சிங், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் அதிக அளவில் கடுமையாக உழைக்கின்றனர். இதோ இங்கு இருக்கும் மண்ட்சோர் எம்.பி மீனாட்சி நடராஜன் இதற்கு நல்லதொரு சாட்சி. அவர் மிகவும் நேர்மையானவர். கடும் உழைப்பாளி, இன்னும் சொல்லப்போனால் அனைவரும் விரும்பத் தக்கவகையில் 100 சதவீதம் மிக கவர்ச்சியானவர் எனக் கூறியதாக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டது. இதையடுத்து பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புக்கள் திக்விஜய் சிங்கிற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. திக் விஜய் இங்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. அது முற்றுவதற்குள் அவரை நல்லதொரு மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என பாரதிய ஜனதா கூறியுள்ளது.
திக்விஜய் சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை இப்போதெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். இதனிடையே தான் அப்படி பெண் எம்.பியை வர்ணிக்கவில்லை, தனது பேச்சைத் தவறாக அர்த்தப்படுத்திய டெல்லி டி.வி மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என திக் விஜய் சிங் கூறியிருக்கிரார். திக் விஜய் சிங் நகை செய்யும் தொழிலைச் சார்ந்த பரம்பரையை சேர்ந்தவர். இதனால் அந்த வகையில், மீனாட்சியை 100 சதவீதம் தூய்மையான (டஞ்ச் மால்), தங்கப்பதுமை எனும் அர்தத்திலேயே வர்ணித்ததாக திக் விஜய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பில் மீனாட்சியிடமே கேட்ட போது, திக் விஜய் சிங் ஒரு மூத்த தலைவர். அவரது பேச்சை கொடூர புத்தி கொண்டவர்கள் திரித்துக் கூறுகின்றனர். அந்த விழாவில் கூடியிருந்த 15 ஆயிரம் பேரும் சரியான கண்ணோட்டத்திலேயே அப்பேச்சை பார்த்தார்கள். அவர் எனது அரசியல் நடவடிக்கைகளையே பெருமையாக கூறினார் என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பிறந்த தமிழ் பெண் மீனாக்ஷி: இவர் பெற்றோர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். தந்தை அங்கு மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ராகுல்காந்தி மீதான மதிப்பால், மீனாக்ஷி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் மத்திய பிரதேசத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக மீனாக்ஷி மிக சிறப்பாக பணியாற்றி இருந்திருக்கிறார். இவரது பணிகளைப பார்த்து 2008ம் ஆண்டில் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியால் தேர்வு செய்யப்பட்டார். இதே போல 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில், இவருக்கு சீட் வழங்க ராகுல் சிபாரிசு செய்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு மக்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மீனாக்ஷி உரையாற்றினார். தெள்ளத் தெளிவான நடையில் பல்வேறு குறிப்புக்களுடன் மிக சரளமாக அவர் ஆற்றிய உரை, அப்போது சபையில் இருநத பல்வேறு தலைவர்களை கவர்ந்தது. எம்பிக்களின் சிறந்த உரையில் மீனாக்ஷியின் உரையும் இடம்பெற்றது. இந்நிலையிலேயே மீனாட்சியைப் பற்றி பெருமையாக கூறப்போய், சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிரார் திக் விஜய் சிங்.
இதேவேளை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பில் மத்திய திட்டக் கமிஷன் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய பள்ளிப் பட்டியலை பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பாது போன்று திக் விஜய் சிங்கும் தற்போது தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். போஷாக்கின்மை, அனேமியாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பற்றி இலகுவாக கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். ஆனால் அவை இதில் உள்ளடக்கப்படவில்லை. மாதத்திற்கு ரூ.5,000 ற்கு மேல் சம்பாதிப்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக பட்டியலிட முடியாது என திட்டக் கமிஷன் கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எப்படி ரூ.5000 வைத்துக் கொண்டு ஒரு மாதத்தை சமாளிப்பது. அது நிச்சயம் சாத்தியமில்லை என அவர் கூறியுள்ளார். திக் விஜக்ய் சிங் இந்த வருடத்தில் கூறிய சர்ச்சை கருத்துக்கள் பெரும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளியை எண் கவுண்டர் செய்த போது, ஒரு அதிகாரி இறந்தார். இதை போலி எண்கவுண்டர் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினர் திக்விஜய்.
பீகார் மகாபோதி கோயில் குண்டு வெடிப்பில் மோடிக்கு தொடர்பு உள்ளது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். குண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது எஸ் எஸ் ஆர் என்றும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இப்படி சர்ச்சைகளின் மன்னனாகத் திகழ்ந்து வருகிறார் திக்விஜய் சிங். முன்னதாக இத்திட்டக் குழு கமிஷன் அறிக்கையை பாஜக மிகவும் கடுமையான வார்த்தைகளால் வசை பாடியிருந்ததுடன், காங்கிரஸ் உள்துறை அமைச்சர் கபில் சிங்கும் இந்த அறிக்கைக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
English Summary: Meenakshi natarajan is 100% sexy Lady Comment by Congress Leader Digvijaya Singh