கடலூர்: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது அகில இந்திய மாநாடு, கடலூரில் நேற்று துவங்கியது.
சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாநாட்டுக் கொடியை சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா ஏற்றி, பேசினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடரை விழாக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 33வது மாநாட்டை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாடு துவங்கியது. அகில இந்திய இணைச் செயலர் சுக்லா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை தலைமை உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் வாழ்த்திப் பேசினார். துவக்க விழாவில் வரவேற்புக் குழு கவுரவத் தலைவர் ரங்கராஜன் எம்.பி., மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சி.ஐ.டி.யு., மாநில பொதுச் செயலர் சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதிநிதிகள் மாநாடு, மதியம் துவங்கியது. பொதுச் செயலர் வரதராஜன் சமர்ப்பித்த அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. பிரதிநிதிகள் மாநாடு 27ம் தேதி மதியம் வரை நடைபெறுகிறது. அன்று மாலை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
Cuddalore Agriculture Conference