இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal திண்டுக்கல், ஜூலை. 24- தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார். அவரிடம் தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடியே 1 லட்சத்தை மாவட்ட செயலாளர் எல்.மூக்கையா வழங்கினார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது, தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிதியளிப்பு கூட்டங்களில் இங்குதான் அதிக கூட்டத்தை பார்க்கிறேன். நிதி வழங்கிய தொகையின் மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் தேனியில் நிதி குறைவாக கொடுத்து இருந்தாலும் இங்கு வந்திருக்கும் மக்களின் எழுச்சியில்…

Read More இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆஸ்ட்ரியாவில் கருணாநிதியின் தபால் தலை

திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம்.  இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.  அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.  தனிப்பட்ட…

Read More ஆஸ்ட்ரியாவில் கருணாநிதியின் தபால் தலை

சென்னையில் அதிகரித்து வரும் பெண் பிக் பாக்கெட்டுகள்

increasing women pick pockets in chennai சென்னை மாநகர பேருந்துகளில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களாக இருந்தால் கவர்ச்சி காட்டியும், பெண்களாக இருந்தால் அன்பாக பேசியும் பிக் பாக்கெட் அடிக்கிறார்களாம். இந்த பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு கும்பலாக செயல்படுகின்றனர். ஆளுக்கு ஒரு ஏரியாவாக பிரித்து பஸ்களில் ஏறி காலை முதல் மாலை வரை பிக்பாக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். குறிப்பாக இவர்கள் யாருக்குமே சென்னை சொந்த ஊர் கிடையாதாம். மாறாக வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திருடி செல்கின்றனர். பஸ்களில் ஏறிய பின், ஆண்களாக பார்த்து அருகே சென்று உரசுவது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்போது ஆண்களின் கவனம் திசைமாறிய பின், இன்னொரு பெண் குறித்த ஆணின் பர்ஸை திருடிவிட்டு சென்று விடுவாராம். இதுவே பெண்ணாக இருந்தால் அன்பாக பேசி நடித்து திருடுவார்களாம். இவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால், பிடிக்க முடியாமல்…

Read More சென்னையில் அதிகரித்து வரும் பெண் பிக் பாக்கெட்டுகள்

இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

LETTER TO PRIME MINISTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA சென்னை, 15 – இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது மகனான பச்சிளம் பாலகனும் சிங்கள வெறித்தனமான அரசால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான். இத்தனையும்…

Read More இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகள்: முதல்வர் கடிதம்

Tamil Nadu Government team to meet SEBI பிரதமர் மன்மோகன்  சிங், என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து அனுப்பிய  கடிதத்திருக்கு  பதில் அளிக்கும்  வகையில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, என் எல் சி போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்வது குறித்து யோசிப்பது முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும் என்று பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் உயரதிகாரிகள் அடங்கிய குழு நாளை மறுநாள் மும்பை செல்லும். அங்கு மத்திய அரசு மற்றும் செபி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அதில் குறிப்பிட்டுள்ளார். என் எல் சி பங்குகள் விற்பனையை வடிவமைப்பது, செயல்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். என் எல் சி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண இந்த நடவடிக்கை முன்னேற்றமான சூழ்நிலையாக அமையும், என் எல் சியின் 5…

Read More தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகள்: முதல்வர் கடிதம்

பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: மத்திய தகவல் ஆணையம்

CIC rejects Rajiv Gandhi assassination case convict A G Perarivalan’s RTI plea புதன், 10 ஜூலை 2013: புதுதில்லி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக  வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளன்  குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.  நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்…

Read More பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: மத்திய தகவல் ஆணையம்

மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால்…: திலகவதி IPS

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசானது காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கின்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஜி.சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் சட்ட வல்லுநர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக அமைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து பி.பி.சியில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான திலகவதி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். மேலும் காவல் துறை…

Read More மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால்…: திலகவதி IPS

இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

தர்மபுரி மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை மனித உரிமைக் கழகமானது புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு தகவலில், இளவரசன் உடலானது ரயில் தண்டவாளம் அருகே கிடந்துள்ளதால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஒரு ரயிலின் முன்பு ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை பார்த்து வந்த கவுடு என்னும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும்…

Read More இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை

velliappan murdered in vellore  திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 :  வேலூர் : இந்துமுன்னணி மாநிலச் செயலாளர்  சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார். இன்று மதியம் 3.15 மணியளவில்  வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன…

Read More வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை

தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

Major reshuffle of IAS officers in tamilnadu சென்னை: தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை தவிர திருவண்ணாமலை, தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு கிளம்பிய சற்று நேரத்தில் இந்த உத்தரவுகள் நேற்று வெளியாயின. இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார். மாற்றப்பட்ட அதிகாரிகள் முழு விவரம் : பி.டபிள்யூ.சி.டேவிதார்:  புதிய பதவி: பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர். முந்தைய பதவி: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஹர்மந்தர் சிங்: புதிய பதவி: கைத்திறன், ஜவுளி மற்றும் காதித் துறை முதன்மைச் செயலாளர் முந்தைய பதவி: தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர். எஸ்.கிருஷ்ணன் புதிய பதவி: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் நிதித் துறை செயலாளர்- செலவினம். டி.உதயசந்திரன்…

Read More தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!