Road accident in india. tamilnadu in Top Position. இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறும் பகுதியாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் 67 ஆயிரத்து 757 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 16 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமான பிரதான சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அளவுக்கு அதிகமான வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சியின்மை, உள்ளிட்டவை விபத்துக்களுக்கான பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இதேவேளை பாதுகாப்பான முறையில் சாலை கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளே இல்லை என்ற நிலை மாறி இன்று 100அடி 200அடி சாலைகள் வந்த பிறகு அதை பொதுமக்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் உபயோகம் செய்யாமல் அதி வேக பயணம் செய்வதாலும் சாலை விதிகளை சரிவர பின்பற்றததுமே காரணம் என தெரிவிக்கின்றனர் Road accident in india. tamilnadu in Top Position.
Read MoreCategory: தமிழக சிறகுகள்
தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.
பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai
Read Moreதமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.
tamilnadu government enterprises ready to buy NLC shares நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பேச்சுகள் இருந்தன. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த மே 23-ஆம் தேதி தங்களுக்கு கடிதம்…
Read Moreதமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பாடசாலை கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. இந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பாடசாலைக்கு செல்ல முடிவதில்லை. இதையடுத்து நாளைமுதல் (திங்கட்கிழமை) முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பாடசாலை துவங்கும், மாலை, 4:15க்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Government school timing changed. Tamilnadu government
Read Moreதமிழ்நாட்டில் 15 புதிய பாலங்கள் – அரசு அலுவலக கட்டிடங்கள் திறப்பு
15 new bridges and government building opened in tamilnadu தமிழகத்தில் ரூ.58 கோடியில் கட்டப்பட்ட 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் புதிய பாலங்களை அவர் திறந்தார். இதற்கான நிகழ்ச்சி கடந்த 20- ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில், கிளியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், விழுப்புரம் மாவட்டம், அகரக்கோட்டாலத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், அரியலூர் மாவட்டம், குழுமூரில் ஆணைவாரி ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் ரயில்வே கடவு எண் 130-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் மங்கலத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர்…
Read Moreமாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பா.ம.க
பாமக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. பாமக முன்னரே அறிவித்தபடி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு இல்லை, ஆதரவும் இல்லை என்பதற்கேற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் அன்புமணி ராமதாஸ். தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின்…
Read Moreதமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்
New Tamilnadu ministers of aiadmk Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான் மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர் தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல் மரபினர் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…
Read Moreதமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். இன்று முதல்வர் ஜெயலலிதா தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி(சேமிப்பு கிடங்கு கழகம்), வி.என்.ரவி(ஜவுளி கழகம்), பிரபாகர்(சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன்(சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன்(பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன்(வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன்(தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8…
Read Moreகுழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு
இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழத்திற்கு மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். துரியன் பழம் சீசன் துவங்கியுள்ளதையடுத்து அதை வாங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை, காய்கறிகள், குறிப்பிட்ட வகை மலர்கள், பழங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் துரியன் பழத்திற்கு அதிக தட்டுப்பாடு. குன்னூர் அருகே உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில் துரியன் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரசு பண்ணையில் 31 துரியன் மரங்கள் இருந்தாலும் அதில் 15 மரங்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக பழம் தருகின்றன. துரியன் பழம் உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் குழந்தை இல்லாதவர்கள் துரியன் பழத்தை வாங்க…
Read Moreகனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..
Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK
Read More