உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த…

Read More உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறப்பு

Tamilnadu school reopens on 10th June 2013 கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-க்குப் பதில் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி…

Read More கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறப்பு

தென்காசி அருகே நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். திரும்பவும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி ஆர்.டி.ஓ. ரமேஷ், வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அதே பகுதியில் கடந்த…

Read More தென்காசி அருகே நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் மக்கள் அச்சம்

முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமர் ஆக நாஞ்சில் சம்பத் விருப்பம்

next prime minister J.Jayalalitha to save india : Nanjil Sampath Speech தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வெற்றிபெற்று  இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், பென்னிகுயிக்கிற்கு நினைவகம் அமைத்து உலக அளவில் ஜெயலலிதா இன்று போற்றப்படுகிறார். மதிமுகவுக்காக 18 ஆண்டுகள் உழைத்தேன், அன்று பலனில்லை. கடந்த செப்டம்பர் முதல் நான் ஒரு முழு அரசியல்வாதியாக, அதிமுகவின் கடைசி தொண்டனாக தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்டேன். சாதனைகள் படைக்கும் தமிழக முதல்வர் வழியில் செல்வோம். ஜாதியை தூண்டி விட்டு அரசியலாக்க முயன்றவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ். அதை முறியடித்தவர் தமிழக முதல்வர். கருணாநிதி…

Read More முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமர் ஆக நாஞ்சில் சம்பத் விருப்பம்

நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கம்: நில மோசடி வழக்கு

AIADMK Tirunelveli rural north district secretary, a case of land-grabbing ஜூன் 07,2013, :திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.குமார்பாண்டியன். குற்றால நகராட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார். நெல்லை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுற்றுலா துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிப்பட்டு குமார்பாண்டியன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா, பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இவர் குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அவசர பணத்தேவைக்காக அவர் குற்றாலத்தை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார்பாண்டியனிடம் நிலத்தின் பேரில் கடன் வாங்கினார். சமீபத்தில் சுப்பையா கடன் தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டு நிலத்தை மீண்டும்…

Read More நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கம்: நில மோசடி வழக்கு

தந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

russian story by j.Jayalalitha ஸ்ரீரங்கம், 2013 ஜூன்.4 – : தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், அவரது மகன் ஸ்டாலினையும், கடுமையாகச் சாடி, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில், குட்டிக் கதை கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:- சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி, இவையெல்லாம் வெறும் அறிவிப்புகள் என குதர்க்கமாகத் தெரிவித்தார். அவரது மகன் மு.க. ஸ்டாலின் “இது 110 ஆட்சி’ என்று கூறி “இதில் 50 சதவீதத்தையாவது நிறைவேற்ற முடியுமா?’ எனக் கேட்கிறார். இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். விதி 110-ன்…

Read More தந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு

new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…

Read More தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு

தமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்

Tamilnadu Population 2013 தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டி உள்ளது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழ்நாடு பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ணாராவ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களும், 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர் ஆண்கள், 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் (2001-2011) தமிழகத்தில் மக்கள் தொகை…

Read More தமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்

sslc results exam 2013 தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள…

Read More எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையை மீறி மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கப்பற்படை 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு, 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து, தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றுள்ளனர். வரும் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாளாக கடைபிடித்து வருவதால், எப்போதும் போல ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க தயாரக இருக்கும்…

Read More கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.