மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான்.
அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார்.
பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் நிலமாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித் மாணவன் தான் அணிந்திருந்த செருப்பை தலையில் வைத்து நடக்குமாறு தண்டனை கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்
- 116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.
- சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
← முந்தைய செய்தி: சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்
அடுத்த செய்தி →: மனித முன்னோடிகள் எலியை விட சிறியவர்கள் : சீன ஆராய்ச்சி
