Famous Tamil singer TM Soundarajan dead பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர். Famous Tamil singer TM Soundarajan dead Veteran singer TM Sounda rajan passed away after fighting for his life over the last few days. The singer TM Sounda rajan won several awards was until recently in ICU of a leading hospital in Mylapoor. Owing to bad health conditions he was in the hospital for some time and some of the celebrities have been visiting him, with even our Superstar visiting…
Read More பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார்.Category: தமிழக சிறகுகள்
தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்
Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government 2013வியாழன் 23 இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.…
Read More தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்
tamilnadu government officers carelessness Tv anchor lingesh குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்” அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார். ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன் வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என் குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள், பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே…
Read More குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்தமிழ்நாடு அரசின் புதிய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி
Dr Niranjan Mardi IAS சென்னை 22 மே 2013: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய முக்கிய நியமனங்கள்: ராஜீவ் ரஞ்சன் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் ( முன்பு வகித்த பதவி: வருவாய்த் துறை செயலாளர்) ககன்தீப் சிங் பேடி – வருவாய்த் துறை செயலாளர் ( முன்பு வகித்த பதவி: கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்) எஸ். விஜயகுமார் – கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (முன்பு வகித்த பதவி: ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்) கிரிஜா வைத்தியநாதன் –…
Read More தமிழ்நாடு அரசின் புதிய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிநாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன் சபரிநாதன். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமின் மகன் சிவா(வயது 21). இவரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த காசிநாடார் மகள் சவுமியா(வயது 21) என்பவரும் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர் பால் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை சவுமியா வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் பொன்னேரி பகுதியை சேர்ந்த சேகர்(21), செல்லப்பாண்டியன்(29) ஆகியோருடன் ஒரு காரில் சபரிநாதன் நாகர்கோவில் வந்து சவுமியா, சிவா, ஜெயராம் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சவுமியா, ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…
Read More நாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்ஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்
AIADMK Politician car seized in dharmapuri 20 மே 2013 தர்மபுரி: ஜெ.பேரவை மாநில செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், அரசு விதிகளை மீறி, சுழல் விளக்கு பொருத்திய காரை பயன்படுத்தியதால் எஸ்.பி உத்தரவின் பேரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். எஸ்.பி.,ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் அதிவேகத்தில் தருமபுரி நான்கு சாலைகள் சந்திப்பில் சென்ற காரை பரிசோதனை செய்து பார்க்கும் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜெ.பேரவை மாநில செயலாளர் டி.ஆர். அன்பழகன் சட்டவிரோதமாக சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அந்தஸ்தில் இருக்கும் டி.ஆர். அன்பழகன் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் எம்.துரை (39)…
Read More ஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்விஸ்வரூபம் திரைப்படம் : நீதிமன்றம் அவசர உத்தரவு
actor kamal hassan vishvaroopam high court order நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார். தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள…
Read More விஸ்வரூபம் திரைப்படம் : நீதிமன்றம் அவசர உத்தரவுசங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை
சங்கராபுரம், 2013.மே.17-சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன. முனிசாமி சங்கராபுரம் பல்லவன் வங்கி சந்து பகுதியை சேர்ந்தவர். இவர் சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தற்சமயம் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார். மேலும் முனுசாமி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதியில் கேபிளும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிசாமி சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்சி அலுவலக கட்டிடம் கட்டி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் முனிசாமி கட்டிட பணியை பார்வையிட்டு கொண்டு இருந்தபோது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கினர். உடனே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முனிசாமி ஓடினார், எனினும் அந்த கொலை கும்பல் முனிசாமியை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிசாமி தலை மற்றும்…
Read More சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலைவன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை
Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார் ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…
Read More வன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கைதேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை
dmdk tirupur meeting தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. dmdk tirupur meeting
Read More தேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை