தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும்…
Read More 1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலைCategory: தமிழக சிறகுகள்
தென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு
New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று, சட்டசபையில் 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் : சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல், மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும். திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா,…
Read More தென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்புகரிகால் சோழனுக்கு மணி மண்டபம்: முதல்வர் அடிக்கல்
karikala cholan கரிகால் சோழனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா 6 மே 2013 ( திங்கள்கிழமை) நாட்டினார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் பென்னிகுயிக் நினைவு மண்டபம் விழாவின் போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் பழமையான அணைகளில் ஒன்றான கல்லணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையைப் போற்றி கௌரவிக்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் படி, ரூ.2.10 கோடியில் 4000 சதுர அடிப் பரப்பில் 32 அடி உயரம் கொண்ட அரங்கம், அதனைச் சுற்றி நான்கு புறங்களிலும் 28 அடி உயரத்தில் தூண்களுடன் கூடிய நான்கு முகப்பு மண்டபங்கள்…
Read More கரிகால் சோழனுக்கு மணி மண்டபம்: முதல்வர் அடிக்கல்ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை
Adams bridge sethusamudram தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்: இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள்…
Read More ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கைமின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி
மின்வெட்டை கண்டித்து தலைவர் விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி தேமுதிக சார்பாக நடத்தவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மே 5 தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் தொடர்ந்து வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் பாதிப்புக்குள்ளான பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை மந்தநிலையை கண்டித்தும் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றறு பேசுகின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More மின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணிசேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்
Sethusamudram Shipping Canal Project சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம். வடசென்னை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பேச உள்ளார். க.அன்பழகன் கடலூரிலும், மு.க.ஸ்டாலின் கரூரிலும், துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர். Sethusamudram Shipping Canal Project
Read More சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா
New bus terminus to come at Vandalur சென்னை 01-மே-2013: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை 30 மே 2013 முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் :- தமது ஆட்சியில் சென்னை மாநகரில் பெருகிவரும் வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்க படாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்துக்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய…
Read More சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதாபிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு
Sri Lankan actress Jacqueline Fernandez சென்னை: பிரபுதேவா இயக்கி வரும் இந்திப் படமான ராமைய்யா வொஸ் தாவைய்யா படத்தில் இரண்டாம் கதா நாயகியாக சிங்கள நடிகையான ஜாகுலின் பெணான்டஸ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதால், பிரபுதேவாவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இப் படத்தில் நடிகர் கிரிஷ்குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றொரு ஹீரொயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு, தமிழர்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிங்கள நடிகையை பிரபு தேவா தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. Sri Lankan actress Jacqueline Fernandez Flats sale in Chennai Ayanambakkam
Read More பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புநவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்பு
Tamilnadu Sugarcane Agriculture சென்னை: விவசாயிகளுக்கு நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 25க்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக இருக்கிறது. காகிதம், சர்க்கரை, வெல்லம், கால்நடை தீவனம், மின்சாரம், ஆகியவை கரும்பிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன. கரும்பு உற்பத்தித் திறனை அதிகபடுத்துவதனாலும், செலவுகளை குறைப்பதனாலும் கரும்பு விவசாயிகள் அதிக லாபம் அடைய முடியும் என்பதை மையமாக கொண்டு, ‘நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்” என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். ஆக, இந்த 2013ல் 7500 ஏக்கர் பரபளவில் நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல் படுத்த கட்டளையிட்டு ரூ.12கோடியே 93 லட்ச ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான…
Read More நவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்புசமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்
புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. Property sale in Chennai Annanagar…
Read More சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்