VCK leader Thirumavalavan calls on Vijayakant சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு,…
Read More விஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்புCategory: தமிழக சிறகுகள்
இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க நிறுத்த வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
Lankan army illegally encroaching lands of Tamils 26 ஏப்ரல் 2013: இலங்கையில் தமிழர் நிலங்கள் சிங்கள ராணுவத்தால் பறிக்கப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பாமல் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்து,இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குச் சொந்தமான 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்பும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை. தற்போது சிங்கள ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு பிறப்பித்துள்ளது.…
Read More இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க நிறுத்த வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறது
Chennai-Bangalore double decker train service begins பெங்களூர்: 26 ஏப்ரல் 2013: சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம். சென்னை – பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு ஏசி ரயில் சேவை நேற்று (26 ஏப்ரல் 2013) துவங்கப்பட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த மாதம் 25ம் தேதி (25 ஏப்ரல் 2013) துவங்கப்பட திட்டமிடப்பட்டு ஒரு மாதம் தாமத்திற்கு பிறகு துவங்கியது. தென் மேற்கு ரயில்வே (South western Railway) அறிக்கையின் படி, தினசரி சுப்பர் பாஸ்ட் (superfast) எக்ஸ்பிரஸ் காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் வந்தடையும். திரும்ப, அது மதியம் 2.40 மணிக்கு பெங்களூரில் இநருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். Chennai-Bangalore double decker train service begins English Summary: The Chennai-Bangalore air…
Read More சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறதுதமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.
Tamil nadu tourism new policy சென்னை 26 ஏப்ரல் 2013: தமிழ்நாடு 2011 ல் 14 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (13.67 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 33 லட்சம் வெளிநாட்டு பயணிகள்). 2012ல் மொத்தம் 18.76 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (உள்நாட்டு பயணிகள் 18.41 கோடி மற்றும் 35 லட்சம் வெளிநாட்டு பயணிகள்) ஆக சுற்றுலா பயணிகளின் சதவீதம் 34 வளர்ச்சி கண்டது. தமிழ்நாடு அரசு புதிய சுற்றுலா கொள்கைகள் உருவாக்கி ஆசிய மேம்பட்டு வங்கியின் {Asian Development Bank (ADB)} உதவியுடன் சுமார் ருபாய் 500கோடியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றுலா கொள்கை அதிகமாக பணம் செலவழிக்கும் பயணிகளை கவரவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீட்டாளர்களை கவரவும் திட்டம் வகுத்து அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More தமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை 25 April 2013 தமிழக சட்டசபையில், நேற்று விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம் அமைய இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85…
Read More தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகூத்தாண்டாவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் அழகிப் போட்டி 2013
Koothandavar kovil transgender festival 2013 22 April 2013 விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான (அரவாணிகள்) திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதில் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் English Summary: Every year in the Tamil month of Chittirai (approximately middle of April to middle of May). Transgenders from around Tamil Nadu and other parts of India head to the village of Koovagam to marry the deity named…
Read More கூத்தாண்டாவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் அழகிப் போட்டி 2013இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.
Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சகுந்தலா…
Read More இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
Sivanthi Adityan died சென்னை 20 ஏப்ரல் 2013 : டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் (வயது 76), உடல்நலக் குறைவினால் கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று – வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். Sivanthi Adityan died Real Estate Chennai = Buying selling Rent and Lease
Read More சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.
திருநெல்வேலி 17ஏப்ரல் 2013: முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடுத்த அவதுறு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகததால் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) நிறுவனர் விஜயகாந்த்திற்கு எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது. இவர் மேல் 23 வழக்குகள் நிலுவைளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Non bailable arrest warrant Vijayakanth flats
Read More நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.
பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. அவர் கடந்த சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இசைஅமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து பல தமிழ்த் திரைப்படப் பாடல்களை உருவாக்கியவர் இராமமூர்த்தி. அவ்விருவரும் மெல்லிசை மன்னர்கள் என்றே அழைக்கப்பட்டனர். 1950ளில் துவங்கிய அவர்களது இணைந்த இசைப்பயணம் 1965ல் முடிவிற்கு வந்தது. எனினும் தொடர்ந்தும் இராமமூர்த்தி இசையமைத்தார். எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவர் இசை அமைத்தார். கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தை அளித்தார் என்பது குறிபிடதக்கது. டி.கே.இராமமூர்த்தியின் மறைவுக்குத் திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். Music Director TK ramamoorthy Expired
Read More பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.