chennai adyar cancer institute சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சத்தை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்-நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும்…
Read More சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சாஸ்த்ரா பல்கலை. ரூ. 54 லட்சம் நன்கொடைCategory: தமிழக சிறகுகள்
ஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு .,
திருத்தணி செவ்வாய் 16ஏப்ரல் 2013 : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மோசடி ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்து கோர்ட்டை ஏமாற்றி ஜாமின் பெற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இவர் எங்கே இருக்கிறார் என தேடி வந்த போலீசாருக்கு ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ.,வை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் டி.எஸ்.பி., பாலச்சந்தர், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கங்காதரன், ஏகாம்பரம் ஆகியோரை கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரை பிடிக்க வீடுகள் மற்றும் அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற…
Read More ஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு .,பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம்
சென்னை 15Apr2013: பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம் பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் தெனிந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். சமீப நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். இவர் ஞாயிறன்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Read More பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம்மீன் பிடிக்கத் தடைக் காலம் தொடங்கியது
தமிழகத்தில் ராமேசுவரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்கத் தடை காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இத் தடை மே மாதம் 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு அமலில் இருக்கும். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்கள் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Read More மீன் பிடிக்கத் தடைக் காலம் தொடங்கியதுஇலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றது
இராமேஸ்வரம் 15Apr2013: இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை கைது ஞாயிறு அன்று செய்தது நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒன்பது புதுகோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் இரண்டு இலங்கை கடற்படை இழுத்து சென்றது என மீனவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.
Read More இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றதுதமிழ்ப் புத்தாண்டு:கோவில்களில் இன்று லட்சார்ச்சனை வழிபாடு
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முக்கிய கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை வழிபாடும், ஆன்மீக சமய சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், ஒப்பிலியப்பன் கோவில் திருச்சேறை சாரநாத பெருமாள் மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்களில் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
Read More தமிழ்ப் புத்தாண்டு:கோவில்களில் இன்று லட்சார்ச்சனை வழிபாடுதமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆளுநர் கே. ரோசய்யா: தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி, பைசாகி மற்றும் விஷு பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெறுப்பை அகற்றி அன்பு, இரக்கம் மற்றும் கருணை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம். இப் புத்தாண்டில் நம்மிடையே ஒற்றுமை ஓங்கி இந்தியாவிலும், தமிழகத்திலும் அமைதியும், வளமும் கொழிக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா: தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தாய் மொழியாம் தமிழ், பழம்பெருமையும்,…
Read More தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 28 சிறந்த தமிழ் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், பதிப்பகங்களுக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Tamil nadu Logo இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அந்த நூல்களைப் பதிப்பித்த பதிப்பகங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, 1330 திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 36 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும், மாநில அளவில் கவிதை, பேச்சு, கட்டுரைப்…
Read More தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு