பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.
அவருக்கு வயது 91. அவர் கடந்த சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இசைஅமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து பல தமிழ்த் திரைப்படப் பாடல்களை உருவாக்கியவர் இராமமூர்த்தி. அவ்விருவரும் மெல்லிசை மன்னர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
1950ளில் துவங்கிய அவர்களது இணைந்த இசைப்பயணம் 1965ல் முடிவிற்கு வந்தது. எனினும் தொடர்ந்தும் இராமமூர்த்தி இசையமைத்தார். எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவர் இசை அமைத்தார்.
கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தை அளித்தார் என்பது குறிபிடதக்கது.
டி.கே.இராமமூர்த்தியின் மறைவுக்குத் திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.