சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா

New bus terminus to come at Vandalur

சென்னை 01-மே-2013: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Chief Minister Dr.J. Jayalalitha

செவ்வாய்க்கிழமை 30 மே 2013 முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் :- தமது ஆட்சியில்

சென்னை மாநகரில் பெருகிவரும் வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்க படாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்துக்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள ஒப்பந்த பேருந்துகளுக்கான பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகம் ஆகியனவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதன் காரணமாக, வாகனங்கள் செல்லும் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற நிலையில் உள்ளது. இங்கு, நாளொன்றுக்கு, 2,100 பேருந்துகள், 2,900 முறை வந்து செல்கின்றன.  இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 1,250. இடப் பற்றாக்குறை காரணமாக, போக்குவரத்துக் கழகங்களுக்கான பணிமனை, கோயம்பேட்டில் அமைக்கப்படவில்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின், மொத்த உணவு தானிய அங்காடி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

புதிய புறநகர் பஸ் முனையம் :

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இங்கிருந்து செல்லும் பேருந்துகளில் பாதிக்கு மேல் தென் மாவட்டங்களுக்குச் செல்பவையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், தென் மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பஸ்களுக்கென தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச் சாலை ஆகியவற்றுக்கு இடையே வண்டலூர்-வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூர் ரயில் நிலையத்துக்கு அருகில் ஒரு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், கோயம்பேட்டின் இப்போதைய நெரிசல் விலகி பயணிகள் எளிதாகவும், வசதியாகவும், விரைவாகவும் பயணிக்க வழி வகுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.

New bus terminus to come at Vandalur

English Summary: Jayalalitha announces setting up of a new bus terminus in Vandalur. Noting that the CMBT in Chennai Koyambedu was getting congested, she said a new terminus was required. “With a wholesale market nearby, vehicles can only travel at a speed of 10kmph,” she said in the assembly. She made the announcement under statement 110 during the session. The new bus terminus will have space for moffusil buses, MTC buses, parking for two-wheelers and four-wheelers, bus depots, workshops, restaurants and public toilets.

Related posts