மின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி

மின்வெட்டை கண்டித்து தலைவர் விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி தேமுதிக சார்பாக நடத்தவுள்ளார்.
விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி

 

ஞாயிற்றுக்கிழமை மே 5 தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் தொடர்ந்து வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் பாதிப்புக்குள்ளான பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை மந்தநிலையை கண்டித்தும் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றறு பேசுகின்றனர் என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Related posts