reporters without borders Chart 2012
மே 3-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 140 ஆவது இடத்திலும், இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து 29ம் இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும்,ரஷ்யா 148 ஆவது இடத்திலும். சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் இருக்கின்றன.