தேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை

dmdk tirupur meeting

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக  கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

dmdk tirupur meeting

 

Related posts