next prime minister J.Jayalalitha to save india : Nanjil Sampath Speech
தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வெற்றிபெற்று இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், பென்னிகுயிக்கிற்கு நினைவகம் அமைத்து உலக அளவில் ஜெயலலிதா இன்று போற்றப்படுகிறார்.
மதிமுகவுக்காக 18 ஆண்டுகள் உழைத்தேன், அன்று பலனில்லை. கடந்த செப்டம்பர் முதல் நான் ஒரு முழு அரசியல்வாதியாக, அதிமுகவின் கடைசி தொண்டனாக தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்டேன். சாதனைகள் படைக்கும் தமிழக முதல்வர் வழியில் செல்வோம். ஜாதியை தூண்டி விட்டு அரசியலாக்க முயன்றவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ். அதை முறியடித்தவர் தமிழக முதல்வர்.
கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தி குடும்ப உறுப்பினர்களை அமைச்சராக்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்கள் மனதிலும், மாணவர் மத்தியிலும் மாபெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. உலகம் போற்றும் தலைவராகவும், வரலாறு கூறும் முதல்வராகவும் ஜெயலலிதா திகழ்கிறார். அவர் பாரத பிரதமராக வந்து இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.