சூரியனின் அடிப்பகுதியை ஆராய நாசா புதிய செயற்கைகோளை அனுப்ப முடிவு

new nasa satellite

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை (ஐரிஸ்) இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது.

இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.

இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது, சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும்.

சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும் பூமியின் காற்றுமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் சூரியனை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

new nasa satellite

Related posts