நாசாவில் புதிய 8 விண்வெளி வீரர்கள்: அதில் பாதி பேர் பெண்கள்

NASA announces 8 new astronauts : 4 Women ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில், சூரிய குடும்ப ஆராய்ச்சிக்காக புதிய தலைமுறை விண்வெளி ஆராய்சியாளர்கள் தேர்வு செய்ய பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள். முன்னதாக சுமார் 6000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8 பேர் மட்டுமே தெர்தெஉக்க பட்டனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிக அளவில் பெண்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. நாசாவின் தலைமை நிர்வாகி திரு சார்லஸ் போல்டன் கூறுகையில், அமெரிக்காவின் இந்த புதிய முயற்சி வான்வெளியில் முன் எப்போதும் இல்லாத திடமான புதிய திட்டமாக திகழும் என குறிபிட்டுள்ளார். புதிய விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என நாசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NASA announces 8 new astronauts English Summary: Nasa…

Read More

சூரியனின் அடிப்பகுதியை ஆராய நாசா புதிய செயற்கைகோளை அனுப்ப முடிவு

new nasa satellite அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை (ஐரிஸ்) இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது. இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும். இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது, சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும். சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும்…

Read More