குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு

இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழத்திற்கு மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

துரியன் பழம் சீசன் துவங்கியுள்ளதையடுத்து அதை வாங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை, காய்கறிகள், குறிப்பிட்ட வகை மலர்கள், பழங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் துரியன் பழத்திற்கு அதிக தட்டுப்பாடு. குன்னூர் அருகே உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில் துரியன் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அரசு பண்ணையில் 31 துரியன் மரங்கள் இருந்தாலும் அதில் 15 மரங்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக பழம் தருகின்றன. துரியன் பழம் உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் குழந்தை இல்லாதவர்கள் துரியன் பழத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசு தோட்டக்கலை பண்ணையில் துரியன் பழம் கேட்டு 123 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பண்ணையில் இன்னும் விற்பனை தொடங்கப்படவில்லை.

ஆனால் வியாபாரிகள் தனியார் தோட்டங்களில் துரியன் பழங்களை வாங்கி குன்னூரின் பல பகுதிகளில் விற்பனை செய்து வரும் இப்பழத்தில் விலை ஒரு கிலோ ரூ.400 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

durian fruit in nilgiris

Related posts