பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: மத்திய தகவல் ஆணையம்

CIC rejects Rajiv Gandhi assassination case convict A G Perarivalan’s RTI plea

புதன், 10 ஜூலை 2013: புதுதில்லி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக  வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளன்  குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.  நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார்.

பேரறிவாளன்

அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில் கருணை விவகாரங்களில் அதிகாரிகளின் குறிப்புகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள், பாதிக்கப்பட்டவர்களின் மனு விவரங்கள் போன்றவற்றை கொண்டே குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு விளக்கம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே மனுத்தாரரின் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்து அரசியல் சாசனத்தின் 74வது பிரிவுக்கு கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதால் அவற்றை தகவல் ஆணைய விதிகளின் அடிப்படையில் வெளியிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள ஆணையம், தகவல் ஆணைய விதிகளும் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதே என்று விளக்கம் அளித்துள்ளது.

English Summary:

CIC rejects Rajiv Gandhi assassination case convict A G Perarivalan’s RTI plea

India’s Central Information Commission (CIC) has turned down a plea of former Indian Prime Minister Rajiv Gandhi’s assassination case convict A G Perarivalan seeking records carrying reasons for the rejection his clemency petition. Opposing the plea, India’s Ministry of Home Affairs cited a Delhi High Court order which restricted disclosure of communication between the then President K R Narayanan and the then Prime Minister Atal Bihari Vajpayee, saying RTI Act cannot have overriding effect over the Constitution of India. According to a India’s Supreme Court decision, advice tendered by the Ministers to the President under the Article 72 of the Constitution shall not be enquired into in any court. However, none of the cases cited by the Home Ministry relate to the issue of disclosure of material on the basis of which mercy petition of death row convicts were decided by the President and applicability of the RTI Act on such records. In his RTI application, Perarivalan wanted to know the reasons of rejection of his mercy petition filed under Article 72 of the Constitution. While rejecting the petition of Perarivalan, Information Commissioner Sushma Singh held, “In this case the reasons are primarily recorded in the advice tendered by the Council of Ministers which is protected by Article 74 (2) of the Constitution. As held by the Honble Delhi High Court, the provisions of the RTI Act is also bound by the Constitution.” However, Singh allowed the disclosure of report of the Multi-Disciplinary Monitoring Agency to Perarivalan as was instructed by the CIC in a separate case filed by his lawyer Mayilsamy K. Appearing through video-conferencing for hearing, Perarivalan had argued that the Supreme Court order on Article 74 might prohibit only the courts from inquiring into the advice tendered by the ministers but it cannot be said by no stretch of imagination that the citizens and the person affected would not have right to know the reasons. “Hence the reasons ought to be provided. Therefore, the information sought in the original application need to be allowed in full,” he said. He said the rejection was made by the President and the same is intimated to the affected convict through the MHA. Therefore the reasons for rejection by the President is not prohibited from disclosure by citing any provisions of law except those under RTI Act as this is an umbrella law which governs the disclosure of information by the government authorities. He also reasoned that a duty is cast upon every public authority under section 4 (1)(d) of the RTI Act, 2005 to proactively communicate the reasons for any administrative or quasi- judicial decisions to the affected party. However, neither the Ministry of Home Affairs nor the Presidents secretariat has provided with the reasons for rejection of the mercy petition. The convict had also submitted that the MHA had earlier furnished an incomplete compilation of documents pertaining to mercy petition file to Mayilsamy K (Advocate) on his behalf. Seeking disclosure of MDMA records, he had said it is necessary for him to know whether any investigation in this regard has been completed at all and whether those facts were considered before deciding his mercy petition.

Related posts