சென்னையில் அதிகரித்து வரும் பெண் பிக் பாக்கெட்டுகள்

increasing women pick pockets in chennai

சென்னை மாநகர பேருந்துகளில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களாக இருந்தால் கவர்ச்சி காட்டியும், பெண்களாக இருந்தால் அன்பாக பேசியும் பிக் பாக்கெட் அடிக்கிறார்களாம். இந்த பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு கும்பலாக செயல்படுகின்றனர். ஆளுக்கு ஒரு ஏரியாவாக பிரித்து பஸ்களில் ஏறி காலை முதல் மாலை வரை பிக்பாக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். குறிப்பாக இவர்கள் யாருக்குமே சென்னை சொந்த ஊர் கிடையாதாம். மாறாக வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திருடி செல்கின்றனர். பஸ்களில் ஏறிய பின், ஆண்களாக பார்த்து அருகே சென்று உரசுவது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்போது ஆண்களின் கவனம் திசைமாறிய பின், இன்னொரு பெண் குறித்த ஆணின் பர்ஸை திருடிவிட்டு சென்று விடுவாராம். இதுவே பெண்ணாக இருந்தால் அன்பாக பேசி நடித்து திருடுவார்களாம். இவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால், பிடிக்க முடியாமல் பொலிசார் திணறிகின்றனர். எனவே பேருந்துகளில் பயணம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

increasing women pick pockets in chennai

Related posts