Vijayakanth gets exemption from appearing in court
சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மூன்று வழக்குகளிலும் வெவ்வேறு தேதிகளில் ஆஜராக விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மூன்று வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மூன்று வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்தனர்.
Vijayakanth gets exemption from appearing in court
இதையும் படியுங்கள்
- அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
- ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.
- மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
← முந்தைய செய்தி: மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி
அடுத்த செய்தி →: இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு
