Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…
Read More 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…Category: தமிழ் சிறகுகள் By Saravvanan R
சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..
No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…
Read More சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஆய்வு குழு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
Sagayam, an IAS officer as a special commissioner to probe the mining irregularities ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கனிமவள முறைகேடு குறித்த அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக பிரபல சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாரயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.சோமையாஜி, அந்த அரசாணையைத் தாக்கல் செய்தார். மேலும் அவர், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.இராஜாராமன், சகாயம் நியமனம் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற கனிம முறைகேடுகளை…
Read More ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஆய்வு குழு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடிதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.
subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…
Read More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.
Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார். இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா…
Read More தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.வாகா எல்லைச் சாவடியில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் உள்பட 55 பேர் சாவு. : பிரதமர் மோடி கண்டனம்…
Wagah Suicide attack : 55 Pakistani people, including women and children, were killed and about 200 were injured in a suicide bomb attack at the Wagah checkpoint near Lahore and along the India-Pakistan border on Sunday evening. No damage was reported on the Indian side. இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைச் சாவடி அருகில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உள்பட 55 பேர் இறந்தனர். மேலும் சுமார் 200 பேர் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வாகா… இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இடையே இருக்கும் எல்லைப் பகுதி . இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தானுக்கு…
Read More வாகா எல்லைச் சாவடியில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் உள்பட 55 பேர் சாவு. : பிரதமர் மோடி கண்டனம்…ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closed
Sriperumbudur Nokia Factory closed ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000…
Read More ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closedகலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு
A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC புதுடெல்லி, அக்.31: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட பத்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்…
Read More கலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவுபிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச குத்து சண்டை சங்கம் விதித்தது
International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi அண்மையில் நடந்து முடிந்த 2014-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதி போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றார். இதனால் வீராங்கனை சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்து தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் மூன்று குத்து சண்டை பயிற்சியாளர்களையும் இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The…
Read More பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச குத்து சண்டை சங்கம் விதித்ததுஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை
ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில்…
Read More ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை