USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது. மும்பை : இன்று (01 செப்டம்பர் 2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு உயர்வுடன் துவங்கிஇருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு சுமார் 3 காசுகள் உயர்ந்து ரூ.60.47-ஆக இருக்கிறது. USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected.
Read More அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது.Category: தமிழ் சிறகுகள் By Saravvanan R
இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…
Finance Minister Arun Jaitley presented the Finance Ministry’s report card yesterday (Aug-30-2014) for the last 100 days since the NDA govt came to power, as well as the recent initiatives for development taken by the Finance Ministry. பா ஜ க வின் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று மாதங்களின் அதிரடி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர்.திரு.அருண் ஜெட்லி கூறியுள்ளார். தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூன்று மாத நடவடிக்கைகள் பற்றி பத்திரிக்கை நிருபர்களிடம் சனிகிழமையன்று அவர் பேட்டியளித்தார். இதில் சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டின் முன்னேற்றமும், சாதகமான எதிர்காலப்போக்கும் திருப்தி அளிப்பதாகவும் அருண்ஜெட்லி கூறினார். முதல் 100 நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலன் வெகுவிரைவில்…
Read More இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது
Coimbatore school Teacher stabbed to death by her drunked husband after suspecting her கோவை : பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது.. கோவை ஆவாரம்பாளையத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோவில் வீதியில் வசித்துவருபவர் தனியார் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி (வயது 29) இவரது கணவரின் பெயர் சந்தோஷ்குமார் (வயது 30). சந்தோஷ் குமார் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர். இவரது மனைவி உமாமகேஸ்வரி அதே பகுதியில் இருக்கும் ஓர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாசினி (வயது 6) என்ற மகளும், விகாஷ் (வயது 5) என்ற மகனும், இருக்கின்றனர். முதலில் மனைவியின் மேல்…
Read More பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைதுதுப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனையை மதம் மாறச்சொல்லி கணவன் கொடுமை….
National shooter Tara Shahdeo was cheated and married saying that he is Hindu but after the wedding the husband tortured and forcing to convert as Muslim துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை திருமதி.தாரா சாதேவ்(வயது 23), தனது கணவர் தான் ஒரு இந்து என்று ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி சித்திரவதை செய்ததாக ஜார்க்கண்ட் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவர் இரஞ்சித் சிங் கோரி எனப்படும் இரஹிபுல் ஹூசைனை தில்லி அருகில் கைது செய்தார்கள். இந்த நிலையில் திருமதி.தாரா சாதேவ் தனது கணவர் இரஹிபில் ஹூசைனிமிருந்து விவகாரத்து பெறஇருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Ms Tara Shahdeo – a National…
Read More துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனையை மதம் மாறச்சொல்லி கணவன் கொடுமை….கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…
Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore.. பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார். திரு.சந்திர மோகன் ஷர்மா, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து…
Read More கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…
Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…
Read More லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்
BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election. சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள். அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.…
Read More தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..
An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…
Read More இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..மரியாதை தராத கிராமத்து இளைஞனின் கை துண்டிப்பு.. மதுரையில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஆணைப்படி..
Youngster hand cut by village politician near Madurai for not greeting and respecting on arrival மதுரை: மதுரை அருகில் இருக்கும் ஓர் கிராமத்தினுடைய பஞ்சாயத்துத் தலைவியினுடைய கணவர் வந்தபொழுது மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று மரியாதை தராமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார், அதற்காக 17 வயது மதிக்காத இளைஞரின் கையை துண்டித்துள்ளார். இந்த வெறித்தனமான செயலால் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே மாபெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட சிறுவானூர் எனும் கிராமத்தைதில் இராஜதுரையின் மகன் கார்த்திக் என்பவர் தமது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த போது, பஞ்சாயத்துத்தலைவி திருமதி.தேவியும், அவர்தம் கணவர் திரு.கிருஷ்ணன் அவர்களும் நடந்து வந்துதுகொண்டிருந்த போது உட்காந்திருந்த திரு.கார்த்திக் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் கூறாததால் மிகுந்த சினமடைந்த திரு.கிருஷ்ணன், தங்கள் வரும்போது…
Read More மரியாதை தராத கிராமத்து இளைஞனின் கை துண்டிப்பு.. மதுரையில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஆணைப்படி..தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…
Read More தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்