தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…

Read More

சிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

Indian citizens in Syria to return India:  India has advised its citizens in Syria to leave the West Asian country வாஷிங்டன்: ஓராண்டுக்கும் மேலாக சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவம் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பலியாகினர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த மாதம் சிரிய ராணுவம் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து அங்கு ஐநா பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சிரியா மீது போர் தொடுக்கும் திட்டத்தில் இருந்து இங்கிலாந்து பின்வாங்கியது. எனினும், சிரியா மீது ராணுவ…

Read More

அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!

China Human Rights Survey against US பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும்,  முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக  உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. China Human Rights Survey against US    

Read More