Duplicate forgery Birth certificate of Arvind Kejriwal stating his birth place as Madurai ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ் மதுரையில் பிறந்ததாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் சில வழக்கறிஞர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து ஓர் மனுவை அளித்தார்கள். மாநகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்கள். மேலும் மதுரையில் பிறந்ததாக டெல்லி முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் மாநகராட்சியினர் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும்…
Read More ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ்Category: தமிழ் சிறகுகள் By Saravvanan R
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும் :- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
Indian Universities should increase the advancement of Technology and quality of education for the present scenario, said Indian President Pranab Mukherjee in a speech at Loyola collage today சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அவர் லயோலா கல்லூரியில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது: ஓர் நாட்டின் வளர்ச்சி, அதனுடைய கல்வித் தரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நிலைமை மாறிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், தரம் மிக்க கல்வி என்பது மிக முக்கியம். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். Indian Universities should increase the advancement of Technology and quality…
Read More நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும் :- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலி
South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலியாகினர். தென்னாப்ரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஆஷ்லே ரெட்டி (வயது 30) இவர் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் – தீபிகா (வயது 29) ஆகிய தம்பதிகள் இந்து முறைப்படி உறவினர்கள் படை சூழ, வாழ்த்தொலி முழங்க திருமணம் செய்து கொண்டார்கள். திங்களன்று திருமணம் முடிந்து தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்தில் மற்றும் ஓர் இளைஞர் உடல் நசுங்கி பலியானார். ஞாயிறு கிழமையன்று மிக்க மகிழ்ச்சியோடும், வாழ்த்துக்களோடும்…
Read More தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலிதூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…
Read More தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுநேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து
Fire accident at Mumbai multistorey building மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ…
Read More நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்துபாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்பு
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read More பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்புஅமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள். அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான…
Read More அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்
சேலம்: அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல் இன்று காலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன்படி அ.தி.மு.க,. 35 ஆயிரத்து ஆயிரத்து 609 ஓட்டுக்கள் பெற்று 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது சுற்று தவகலின்படி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரத்து 880 ஓட்டுக்கள் தி.மு.க பெற்றுள்ளது. 1,276 பேர் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என பதிவு செய்துள்ளனர். தே.மு.தி.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து…
Read More அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்
இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஊழலை எதிர்த்து போராடி ‘ஆம்ஆத்மி’ எனும் அரசியல் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். தில்லியில் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அக்கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதனையடுத்து புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முதலில் ஷீலா தீட்சித் முன்னணியில் இருந்தார். ஆனால் அடுத்து கெஜ்ரிவால் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணிக்கு வந்தார். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் 1500 ஓட்டுகள் முன்னணியில் இருக்கிறார். முதல்–மந்திரி ஷீலா தீட்சித் தோல்வி முகத்தில் உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5,000 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார். லட்சுமி நகர் தொகுதியில் மந்திரி ஏ.கே.வாலியா பின்தங்கிய நிலையில் உள்ளார். இதே போல் இரண் வாலியா, ஹருண்யுசுப்,…
Read More புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.
10 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மாற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ஹெச்.வசந்தகுமார் உள்பட 17 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப. சிதம்பரம், சுதர்சன நாச்சிப்பன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அடங்கிய செயற்குழுவில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை அகில…
Read More தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.