கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.

Victory for congress in karnataka election 2013.மே. 8 பெங்களூரு: நடந்து முடிந்த கர்நாடக சட்டபேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 121 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. மொத்த தொகுதிகள்: 224 காங்கிரஸ்: 121 பா.ஜ.க:40   ம.ஜ.த: 40 க.ஜ.க: 6 மற்றவை: 16 இதில் தொழில் அதிபர் அசோக் கனி உள்ளிட்ட 12 சுயட்சை வேட்பாளர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.  victory for congress in karnataka election Advertisement: Real estate company in chennai: Buying and selling of Residential, commercial, industrial and Agricultural properties. The best deal by best square feet

Read More

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி படுதோல்வி

Karnataka assembly election 2013 Posted by Lion Sathish பெங்களூர், மே. 8 2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி படு தோல்வி அடைந்தது. cயை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதே கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருக்கிறர்கள். Karnataka assembly election 2013

Read More

தென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு

New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில்  ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று, சட்டசபையில் ‌‌110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் : சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக  2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி  தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில்  தொழில் பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல்,  மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும். திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா,…

Read More

கரிகால் சோழனுக்கு மணி மண்டபம்: முதல்வர் அடிக்கல்

karikala cholan கரிகால் சோழனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா 6 மே 2013 ( திங்கள்கிழமை) நாட்டினார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் பென்னிகுயிக் நினைவு மண்டபம் விழாவின் போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் பழமையான அணைகளில் ஒன்றான கல்லணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையைப் போற்றி கௌரவிக்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் படி, ரூ.2.10 கோடியில் 4000 சதுர அடிப் பரப்பில் 32 அடி உயரம் கொண்ட அரங்கம், அதனைச் சுற்றி நான்கு புறங்களிலும் 28 அடி உயரத்தில் தூண்களுடன் கூடிய நான்கு முகப்பு மண்டபங்கள்…

Read More

ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை

Adams bridge sethusamudram தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்: இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள்…

Read More

கர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு

Karnataka state assembly election 2013 பெங்களூர் மே 5: கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கும் காங்கிரசிற்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில். 70% வாக்கு பதிவானது. 2008 தேர்தலில் 64.91%  பதிவானது குறிப்பிடத்தக்கது. Karnataka state assembly election 2013

Read More

மின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி

மின்வெட்டை கண்டித்து தலைவர் விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி தேமுதிக சார்பாக நடத்தவுள்ளார்.   ஞாயிற்றுக்கிழமை மே 5 தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் தொடர்ந்து வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் பாதிப்புக்குள்ளான பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை மந்தநிலையை கண்டித்தும் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றறு பேசுகின்றனர் என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Read More

2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை: இலங்கை162 ஆவது இடம்.

reporters without borders Chart 2012 மே 3-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 140 ஆவது இடத்திலும், இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து 29ம்  இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும்,ரஷ்யா 148 ஆவது இடத்திலும்.  சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் இருக்கின்றன. reporters without borders Chart 2012

Read More

ஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.

IAS topper harith v Kumar 2012 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரள பெண்  ஹரிதா வீ  குமார் முதலிடம்.  இதில் கடந்த முன்று ஆண்டுகளாக பெண்களே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  2012 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்(IAS) பணிகளுக்கு 180 பேரும், ஐ.எஃப்.எஸ்(IFS) பணிக்கு 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ்(IPS) பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2013 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸின் முதன்மைத் தேர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. IAS topper harith v Kumar

Read More

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932. மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஏப்ரல் 30ம் தேதி பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் 1-3-2011 நிலவரத்தின் படி மேற்குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்…

Read More