பேஸ்புக்கில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது

lawyer arrested fb comments against ex cm ஐதராபாத் :  முன்னாள் ஆந்திர முதல்வரும் தற்போதைய தமிழக கவர்னருமான ரோசைய்யா மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்தை பதிவு செய்தமைக்காக ஆந்திர வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு கும்பலுக்கும் ரோசைய்யாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. A local court in Andhra Pradesh has remanded Lawyer for FB comments against ex-CM lawyer arrested fb comments against ex cm  

Read More

விஜய் ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கினார்.

actor vijay australian dance thalaiva “தலைவா” என்று பெயர் வைக்கப்பட்ட விஜயின் படம் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Read More

சித்தராமையா கர்நாடக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்

siddaramaiah sworn as karnataka chief minister 13 மே 2013: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் தலை நகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு முந்தைய ஜனதா தள ஆட்சியின் போது, சித்தராமையா நிதி அமைச்சராக   பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. siddaramaiah sworn as karnataka chief minister

Read More

வன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை

Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது  என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார்  ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக  கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த  தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…

Read More

ரு.443 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு.

tamil nadu housing board land encroached தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருடாந்தர தணிக்கை அறிக்கையின் படி மொத்தமாக ரூ.442.99 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கையகபடுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகபடியாக  அண்ணாநகர், பெசன்ட் நகர், முகப்பேர், கே கே நகரில் நடந்திருப்பதாகவும் இதுபோல் கோவையுலும் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு விவரம்: அண்ணாநகர் – ரூ.178.கோடி பெசன்ட் நகர் – ரூ.177.28கோடி முகப்பேர் – ரூ.47.63கோடி கோவை – ரூ.17.6கோடி இதில் கே.கே நகர் பகுதியில் 229.6 ஏக்கர் நிலமும், கோவையில் 82.64 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கையகபடுத்தபட்ட சுமார் 3,353 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அண்ணாநகர், பெசன்ட் நகர், கே கே நகர், முகப்பேர் பகுதியில் பெரும்பாலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. tamil nadu…

Read More

தேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை

dmdk tirupur meeting தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக  கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. dmdk tirupur meeting  

Read More

சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு

Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல்  நடைபெற்றது. இதையடுத்து மே  8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 120 பேர் ஆதரவாக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்தார் . இந்நிலையில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கரஸின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங்,  கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி ஆகியோர் பெங்களூர் விரைந்தனர். முதலமைச்சர்  பதவிக்கு சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து…

Read More

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும்…

Read More

குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

Gulshan Rai appointed as Indian cyber security chief புது தில்லி 10 மே 2013:  திரு குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம். தற்சமயம் நிலவிவரும் இணையதள சமூக குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் களை  கண்டறியவும், வரும் காலங்களில்  நடக்கவிருக்கும் குற்றங்களை தடுக்கவும் இந்த முதல் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. திரு குல்சான் ராய் தற்சமயம் இந்திய கணினி அவசர நடவடிக்கை மையத்தை தலைமை தங்கிகொண்டிருகிறார். Gulshan Rai appointed as Indian cyber security chief

Read More

தமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை

Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு &  தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக  முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும்  தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai  Pan Masala and Gutka banned

Read More