இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Over 100 cars crash in Britain, two hundred injured இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதின. இவ்வாறு 10 நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூடு பனியால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. ஆனாலும், வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சம் இல்லாமல் பாலத்தைக்…

Read More

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல்

Boney Kapoor gets death threats பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின்…

Read More

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது

Two war ships to Sri Lanka from India இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இலங்கைக்கு நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்தான் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக்கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கு 2…

Read More

சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ

Horrifying fate of Assad’s soldiers executed on camera by Syrian rebels சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை, புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரின் அப்துல் சமத் இஸ்ஸா, முதலில் ஒன்றை வாசித்து துப்பாக்கி சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். இவர் பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக…

Read More

குஜராத் மாநிலத்தில் நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம்

Lion and lioness sit in the middle of road, block traffic குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  இதனால் கிர் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் வனப்பகுதியை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சாலையிலிருந்து வனப்பகுதியில் வனப்பகுதியை பார்த்து ரசித்தனர். அப்போது திடீரென சாலையில் ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் ஜோடியாக வழியை மறித்து அசாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனர். இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி…

Read More

28 வயது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்த 52 வயது மகன்

52-year-old son cremates 28-year-old father சண்டிகரில் கடந்த 45 வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான 28 வயது இந்திய விமான அதிகாரியின் உடலுக்கு, நேற்று அவரது 52 வயது மகன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்தவர் ஹவில்டர் ஜைக்மைல் சிங் என்ற இந்திய விமான அதிகாரி. இவர் கடந்த 1968ம் ஆண்டு,மேற்கு இமாச்சல் அருகே, தெற்கு டாக்கா பனிமலை மேல் ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விமானம் விபத்தில் சிக்கியது. அவர் மரணாமடைந்தது உறுதியான போதும் ஹவில்டரின் சடலம் கிடைக்கவில்லை. மரணமடைந்த போது ஹவில்டருக்கு மணமாகி, 7 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹவில்டரின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இந்திய விமான படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிட்டத்தட்ட…

Read More

இந்தியாவில் தினமும் 4,700 குழந்தைகள் மரணம் அதிர்ச்சி தகவல்

4,700 Indian children under five years die everyday   இந்தியாவில் நாள் தோறும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4,700 குழந்தைகளுக்கும் மேல் மரணித்து வருவதாகவும், குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டங்களில் இந்தியா மிகவும் பின்தங்கி 136வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. World Vision India என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றும் 1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த ஆய்வில் மேலும், “இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில், 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது. மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி…

Read More

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

Five killed in road accident திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் ஒன்று அந்த பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில் அந்த காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோயினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற மாணவன் ஓணம் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளா சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று . Five killed in road accident Five members of a family, including a child, were killed this morning…

Read More

இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

 Indian who wrote about escaping from Taliban, shot dead in Afghanistan ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி சுட்டு கொல்லப் பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பானர்ஜி 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் ‘Escape From Taliban’ எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார். 1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில்…

Read More

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச்செல்லும் கேரள ஆசிரியர்

A teacher who swims through a river everyday to get to his students கேரளாவில் ஒரு ஆசிரியர் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் பாடம் சொல்லித் தருகிறார். கழுத்தளவு உள்ள தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார் இந்த ஆசிரியர். மாலையிலும் இதேபோல பயணம். அவரது பெயர் அப்துல் மாலிக். 40 வயதாகும் இவர், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். 20 வருடமாக இந்தப் பள்ளிக்கூடத்தில் அவர் பணியாற்றுகிறாராம். ஏன் இந்த நீர்ப் பயணம்.. எதற்காக இப்படி ஒரு பயணம் என்று அவரிடம் கேட்டால், பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுத்தி வரனும். அதற்குள்…

Read More