நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல்

Boney Kapoor gets death threats பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின்…

Read More