நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல்

Boney Kapoor gets death threats

Boney Kapoor gets death threats

பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போனி கபூருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த அழைப்புகளில் பேசிய நபரின் குரல் ரவியுடையது போன்று உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில் போனி கபூர் வீடு உள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Boney Kapoor gets death threats

Producer Boney Kapoor has been receiving death threat calls from an unidentified person allegedly involved in the robbery that took place at his residence almost a year back. Back then valuables worth Rs 6 lakh was stolen from his residence. Despite two robbers being arrested in this case, now it seems the case might be re-opened. The person has been threatening to kill him at his own house as revenge against the robbers’ imprisonment. A complaint for the same has been lodged at the Oshiwara Police station. Senior Inspector Nasir Pathan recently revealed that the investigations are still on and the anti extortion unit is also involved in a parallel inquiry for the same. For now, the police have increased the security around the area.

Related posts