Lion and lioness sit in the middle of road, block traffic
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதனால் கிர் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் வனப்பகுதியை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சாலையிலிருந்து வனப்பகுதியில் வனப்பகுதியை பார்த்து ரசித்தனர். அப்போது திடீரென சாலையில் ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் ஜோடியாக வழியை மறித்து அசாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனர். இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி சிங்கங்கள் ஒதுங்கும் வரை காத்திருந்தனர். ஆனாலும் அசராத சிங்கங்கள் ரோட்டில் படுத்து உருள ஆரம்பித்தன. இதனை அடுத்து பின்னே வந்த வாகன ஓட்டிகளும் ஒவ்வொருவராக நிற்க ஆரம்பத்தனர். பின்னர் அங்க சாலை நெருசல் உருவானது. பொது மக்கள் கூட்டம் சேர்ந்தும் கூட பல மணி நேரம் இரண்டு சிங்கங்களும் அசையாமல் தனது வேலையை பார்த்து கொண்டிருந்தன. வாகன ஓட்டிகள் புகைப்பட எடுக்க தொடங்கியதும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மிகுந்த சத்தம் இருந்தும் அசராமல் இருந்த ஜோடி சிங்கம் சட்டென்றி திரும்பி பார்க்க வாகன ஓட்டிகள் பகீரென்றனர். பின்னர் சிங்கங்களும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தது. அத்தனையும் சளிப்படைய இரண்டு சிங்கங்களும் சாலையில் பயணிக்க தொடங்க, வாகன ஓட்டிகள் ஒருவர் பின் ஒருவராக கிளம்ப ஆரம்பித்தனர். சிங்க ஜோடியும் காட்டுக்குள் புறப்பட்டது.
Lion and lioness sit in the middle of road, block traffic
The release of Gujarat Tourism’s documentary ‘Khushbu Gujarat Ki’ has increased the turnout of tourists in Gir Forest National Park. People can go and behold the majestic animals in their natural habitat. Few days back Hitesh Bhai went on jungle safari with friends and witnessed something unbelievable.