திருட்டு விசிடியை கையும் களவுமாக பிடித்த நடிகர் விஷால்

fe054f28-4e02-438a-9fe6-ab83104337a5_S_secvpf

காரைக்குடியில் ஒரு பகுதியில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ரிலீஸ் ஆகி ஒரு மாதமே ஆன உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஓட்டிக் கொண்டிருந்ததை எப்படியோ அறிந்த விஷால். அந்த கேபிள் டிவியின் அலுவலகத்தை போலீஸ் உதவியுடன் சென்றுள்ளார். முதல் வீடியோவில் வடகறி படம் ஓடிக் கொண்டிருப்பதை நீங்களே பார்க்கலாம். வடகறி ஓட்டுவதற்கு முன்பு தான் உன் சமையல் அறையில் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்தோடு பிடித்த விஷால் அலுவலகத்தில் இருந்த எல்லோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இரண்டாவது வீடியோ காவல் நிலையத்தில் விஷாலுடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பேச்சுவாக்கில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றும் அந்த பத்திரிக்கையின் பெயரை உரக்க சொல்லியும் விடுகிறார். ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பட்ட சட்டவிரோதமான செயல்களில் உதவியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Related posts