kerala govt dismiss 1300 tamil teachers from schools
கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர்.