CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இளைஞர் தனது பெற்றோர்கள் கண் முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர் ராகுல் (வயது 21) சி.ஏ தேர்வில் கடுமையாக முயன்று படித்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தனது பெற்றோர்கள் திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத தற்கொலை முடிவை எடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 21). சி.ஏ படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரை அவரது பெற்றோர்கள் திட்டியுள்ள்ளர்கள். இதனால் மனமுடைந்து ஆத்திரப்பட்ட அவர் வீட்டைவிட்டே வெளியேறினார். இதை தொடர்ந்து மாணவர் ராகுலின் தந்தை…
Read More உத்தரபிரதேசத்தில் தேர்வில் தோல்வியுற்ற சி.ஏ மாணவர் தற்கொலைஅமெரிக்காவில் அழுக்கு சேராத புதிய வகை துணி கண்டுபிடிப்பு
Military Invents Self-Cleaning Clothes, Take That Tide Detergent ஆராய்ச்சி மையம் ஒன்று அமெரிக்க ராணுவத்தில் ‘‘யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட் இன்ஜினியரிங் சென்டர்’’ எனும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானி திரு.தாவுரங் என்பவர் ஒரு புதிய வகை துணியை உருவாக்கியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஆண்டுக்கு 5 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என பல இடங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்களது ஆடைகளை பணிபுரியும் இடங்களில் துவைத்து சுத்தம் செய்து கொள்ள வசதிகள் ஏதும் கிடையாது. ஆகையால் பல ராணுவ வீரர்கள் தங்களது அழுக்குக்கான உடுப்புகளோடு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டியுள்ளது. ஆகையால் ராணுவ வீரர்களுக்கு துவைத்து சுத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லாத துணியை உருவாகினால்…
Read More அமெரிக்காவில் அழுக்கு சேராத புதிய வகை துணி கண்டுபிடிப்புகணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலை
A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness ஈரோடு மாவட்டதில் உள்ள மொடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர். இதில் கணவருக்கு வந்த இதயநோயினால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர் என அறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி எனும் பேரூரின் அருகே உள்ள சிற்றூர் எழுமாத்தூர். எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி திரு.விஜயராஜ்.(வயது 27). இவர் இதய நோயால் அவதியுற்று வந்தார். இவரது மனைவியின் பெயர் கெளதமி ( 23 வயது). தம்பதியினர் இருவரும் இதய நோய் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்தனர். பல மருத்துவர்களை கண்டு வந்தும் திரு.விஜயராஜின் இதய கோளாறு தீரவில்லை. இதனையடுத்து ஈரோட்டில் உள்ள வீரப்பன்…
Read More கணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலைசீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்
India will beat china in population growth in the year 2050 சீன நாட்டை இந்தியா மக்கள் தொகை பெறுக்கத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வு அறிக்கை தெரிவித்திருக்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் எனவும் அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2-ம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அப்போது உலகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக இருக்கும் எனவும் கூறுகிறது. கடந்த 200 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகை எழு மடங்கு உயர்ந்து தற்சமயம் 710 கோடியாக இருக்கிறது. தற்சமயம், உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் ஒருவர்…
Read More சீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் ரசாயன ஆயதங்கள் சர்ச்சை
Churchill wanted to use chemical weapons against Indian tribes இரசாயன ஆயுதங்களை கொண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதி பழங்குடியின மக்களை கொல்ல இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டிருந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடந்து கொண்டிருக்கும் விக்டவுன் புத்தக விழாவினில் கலந்து கொண்டு தமது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் பற்றி விளம்பரம் செய்திருந்தார். அங்கு அவர் உரையாடுகையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவதில் அதிகம் விருப்பம் கொண்டு இருந்தார்.20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவினுடைய வடகிழக்கு பகுதியினில் தொல்லை தந்த பழங்குடியின மக்களை இரசாயன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்க சர்ச்சில் விருப்பம் கொண்டிருந்தார். இது குறித்த கட்டளை குறிப்பு (மெமோ) ஒன்றை அவர் இந்திய…
Read More இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் ரசாயன ஆயதங்கள் சர்ச்சைஎஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்
Actor cum politician S V Shekar was received life threat from some unknown women திரைப்பட மற்றும் நாடக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததால் அவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேகரின் வீடு, சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் உள்ளது. இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ…
Read More எஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்அக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்
You can buy mini gas cylinders at petrol pumps from 5th October நாட்டின் பெரு நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், “நிறுவனத்துக்குச் சொந்தமான – நிறுவனத்தால் நடத்தப்படும்’ (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும். இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக். 5 ஆம் தேதி பெங்களூரில்…
Read More அக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்
where the mahatma is no less than god கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டிஎனும் கிராமத்தில், மகாத்மா காந்திக்கு கோயில் ஒன்றை கட்டி அதற்கு வழிபாடும் நடத்த படுகிறது.தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி எனும் கிராமத்தில் பல பேர் சுதந்திர போராட்டம் செய்து வந்தார்கள்.ஆகையால், தேசபக்தியும், காந்தியின் மேல் கொண்ட அளவுகடந்த அணிபின் வெளிப்பாடாக காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள், அந்த தேசத்தந்தைக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த பரமசிவம், சக்திவடிவேல், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, பழனிவேல், ஈசப்பர், சாமாண்டி, ராமசாமி, குந்திலிராமசாமி, கிருஷ்ணசாமி, வீராச்சாமி, சுருளியாண்டி, சுப்பிரமணி, சுப்புசாமி உள்பட 80 க்கும் மேற்பட்டோர் தீவிரமாக பங்கேற்றனர். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாகவும், காந்திக்கு உருவசிலை வடிக்கவும், கோவில் கட்டவும்…
Read More தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்பு
‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பிறகு ஆராய்ந்த போது அந்த குழந்தையின் தாய் கருவுற்ற போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது எனவும் ஆனால், ஒரு கரு முட்டை இவனது வயிற்றுனுள் வளர்ச்சி பெறாமல் நின்றுள்ளது அறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி எனும் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினது 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல் சாதரணமாகவே பிறந்தான். அவனுக்கு படிப்படியாக உடல் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் மிகவும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்டது. வழக்கமாக குழந்தைகளுக்கு வரும் ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’…
Read More 2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்புஇங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான 3 குழந்தைகள் பிறப்பு
U.K. Couple Welcomes Rare Identical Triplets இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை எனவும், 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கில்பெர்ட்டை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என்பதைக் கண்டறிந்தனர். எனவே, இக்குழந்தைகளை…
Read More இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான 3 குழந்தைகள் பிறப்பு

