Russia bus bomb: Volgograd blast kills six ரஷ்ய நாட்டில் ஒரு பேருந்தில் ஓர் பெண் தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்தனர். மேலும் 24 பேர் படுகாயமுற்றனர். ரஷ்யாவின் வால்கோகிராட் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் பெண் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி பலியாயினர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதிவாசிகள் தெரிவிக்கும் போது, பலத்த இடியோசை போல் கேட்டது. உடனே அங்கே கரும்புகை சூழ்ந்தது. வெடி சத்தம் கேட்ட மறுவினாடியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிதறிக் கொண்டு…
Read More ரஷ்ய பேருந்தில் பெண் தீவிரவாதி தற்கொலை தாக்குதல்: 6 பேர் பலிஅமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலை
Nevada student opens fire at middle school, killing teacher and injuring 2 அமெரிக்காவில் பள்ளி ஆசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் அருகில் வடமேற்கு நிவாடா என்னும் இடத்தில் ஸ்பார்கஸ் என்ற நடுநிலைப்பள்ளி இருக்கிறது. நேற்று பள்ளி தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான். இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர்…
Read More அமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலைமாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்
Mahatma Gandhi relics to be auctioned in Britain புனே ஏர்வாடா சிறையில் மகாத்மா காந்தி இருந்தபோது உபயோகபடுத்திய ராட்டை வரும் 5ம் தேதி நவம்பரில் இங்கிலாந்தில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு…
Read More மாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்மனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்
Monkeys have manners too! மனிதர்களை போல மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரம் பேசிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக அழகாக மற்ற குரங்கு பேசுவதை உன்னிப்பாக கேட்டு பின்னர் பொருமையாக யோசனை செய்து அதற்கு பதில் அளிக்கிறது. “உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில், இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு…
Read More மனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்மேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்
Make public 64 secret Netaji Subhas Chandra Bose files, Bose family urges Mamata Banerjee இந்திய தேசிய ராணுவம் எனும் இந்தியர்களை கொண்ட போராளிகள் படையை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டத்தை நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More மேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்மூளையை சுத்தப்படுத்தும் ஆழ்ந்த தூக்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
A good nights sleep scrubs your brain clean, researchers find மனிதர்கள் நீண்ட நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிகவும் நலன் தரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்த்தில் விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமை தங்கி நடத்தப்பட்ட ஆய்வில், அவருடைய குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன்? என்பது குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது. அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. A good…
Read More மூளையை சுத்தப்படுத்தும் ஆழ்ந்த தூக்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புமனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை
The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid மனித மூளையை போல் மின்னணு இரத்ததினால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை செய்துள்ளது. மூளை தான் மனிதனுடைய உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியம். இது மனிதன் இயங்க மிகவும் இன்றியமையாததாகும். மூளையை போலவே மின்னணு இரத்ததினால் இயங்கக்கூடிய கணினி ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், மனிதனுடைய மூளையை போல் கம்ப்யூட்டர் ஒருவகையான திரவத்தினால் சக்தியை பெற்று அதே திரவத்தினால் அதனுடைய வெப்பத்தை நீக்கி குளுமை ஏற்படுத்தி கொள்ளும். ஒரு குருதிச் சுற்றோட்டத்தொகுதி போல், ஒரு வித மின்னணு ரத்தத்தினை கம்ப்யூட்டர் உள் வழியாக செலுத்தி ஓடச்…
Read More மனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனைஉணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்
Automated Japanese restaurant serves without waiters ஜப்பான் நாட்டில் புதிய ஒரு உணவகம் அறிமுகம் திறக்கபட்டுள்ளது. இந்த உணவகத்தின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு பரிமாற வெயிட்டர் யாரும் கிடையாது. இருக்கையில் அமர்ந்துகொண்டு கம்பியூட்டர் தொடுதிரையில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும் சுமார் 5 மணித்துளிகளில் உணவு நம்மை தேடி வரும். அதுமட்டும் இன்றி அத்தனையும் தானியங்கி தான். மேலும் உங்களுடைய பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே பில்லிங் இயந்தரத்திலேயே பில் தயாராகி வந்துவிடும். இப்படி இந்த பூமி அடுத்த தலைமுறை இயந்திரங்களை நோக்கி நகர தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது என கூறலாம். Automated Japanese restaurant serves without waiters The Japanese conveyor belt sushi restaurant: It is not…
Read More உணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்
In Germany, man bites off part of nose in bar brawl மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் எதிராளியுடைய மூக்கை கடித்து துப்பி தலைமறைவாகிபோன வாலிபரை ஜெர்மன் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பிரெமென் எனும் நகரத்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில், நேற்று வாரக்கடைசி நாள் ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுபான விடுதியில் போதை கூடுதலான உள்ளூர் குடிமகனுக்கும், நார்டென்ஹாம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு குடிகாரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு அடிதடியாக மாறியது. மற்ற குடிகாரர்களின் தலையீட்டால் தற்காலிகமாக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், நார்டென்ஹாம் ஆத்திரம் அடங்காமல் உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் பாய்ந்து சென்று அவருடைய மூக்கை கடித்து குதறி அதை பிடுங்கி கீழே துப்பிவிட்டார். அந்த நார்டென்ஹாம் நபரை, மற்ற குடிமகன்கள் பிடிக்க…
Read More ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்இந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்
91 pc of X-Ray units in country without registration இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருக்கும் 91 சதவிகிதமான எக்ஸ்-ரே நிலையங்கள் முறையாக பதிவு செய்யாமல் செயல்படுகிறது என்று, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக செயல்பட்டுகொண்டிருக்கும் எக்ஸ்-ரே எடுக்கும் நிலையங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையாக பதிவு செய்து கொண்டு, அனுமதி வாங்கவேண்டும். இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தான், இந்தியாவில் உள்ள எக்ஸ்ரே நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகின்றது. இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தினுடைய செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கிறார். இதை, பி.ஏ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. பொது கணக்கு கமிட்டி ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துதிருக்கிறது. இந்தியாவில்…
Read More இந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்

