பெங்களூர்:அக்டோபர் 17, 2018 கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது .பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் தான் இந்த ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு சென்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.இதனால் அவமானம் தாளாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Read MoreYear: 2018
ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்
கவுகாத்தி :அக்டோபர் 15, 2018 அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும்…
Read More2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது
அலிகார்:அக்டோபர் 13, 2018 உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு…
Read Moreஅதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது
புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Read Moreசிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் !அதிர்ச்சியடைந்த தாய்…பாய்ந்தது போக்ஸோ
நொய்டா: அக்டோபர் 11, 2018 நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி அந்த பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். அந்த சிறுவன் இதனால் அதிர்ச்சியும் பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். ஒரு நாள் அந்த பெண் தன்னுடன் உறவுக்கு அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார் . ஆனால் அந்த சிறுவன் மறுத்ததால் ஆத்தரமடைந்த பெண் அடுப்பறைக்குள் சென்று ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது கொண்டே தன் அம்மாவிடம் அனைத்தையும் சொன்னான். பாலியல் தொல்லை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண் தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் அவர்…
Read Moreகணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
தேவதானப்பட்டி: அக்டோபர் 09, 2018 கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன்…
Read Moreஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த…
Read Moreதாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்
சென்னை: அக்டோபர் 08, 2018 புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி…
Read Moreயாருக்கும் புரியாத வகையில் கிறுக்கிய டாக்டர்களுக்கு ரூ.5000 அபராதம்
லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை …
Read Moreநீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை
சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…
Read More