சென்னை: அக்டோபர் 04, 2018 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில்…
Read MoreYear: 2018
தஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
தஞ்சாவூர்:செப்டம்பர் 29, 2018 சேகர் (வயது 55). என்பவர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதலில் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டிய பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித…
Read Moreசெய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்
செய்யாறு: செப்டம்பர் 25, 2018 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் .…
Read Moreகோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்
புதுச்சேரி: செப்டம்பர் 22, 2018 புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார்…
Read Moreமாணவிடம் பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
சென்னை: செப்டம்பர் 22, 2018 சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி வாணி (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். அதனால் வாணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற வாணியிடம்குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் அருகில் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய வாணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் வாணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Moreஉ.பி.,யில் வேகமாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்
லக்னோ : செப்டம்பர் 21, 2018 உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் வேகமாக பரவி வருகின்ற மர்ம காய்ச்சலுக்கு கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 79 பேர் பலியாகி உள்ளனர் . இதனால் மருத்துவக்குழு மிக கவனமான நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் . வீண் வதந்திகள் பரவுவதையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனர் . இதுவரை அதிகபட்சமாக பெரிலியில் மட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவி வருகின்ற இந்த மர்ம காய்ச்சல் பற்றி கண்டறிவதற்காக மூன்று டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Read Moreகவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த சச்சின் டெண்டுல்கர்
கோல்கட்டா : செப்டம்பர் 21, 2018 மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார். மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியில் நடக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது . இதை பற்றி சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சச்சின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது . சச்சின் டெண்டுல்கர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனக்கு…
Read Moreசீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்கு அடிமையாகி வார்டனை கொன்ற சிறுவர்கள்
பாட்னா: செப்டம்பர் 20, 2018 பீகாரின் புர்னியே பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்காக தொடர்ந்து இருமல் மருந்துகளை சாப்பிட்டு வந்த ஐந்து சிறுவர்களையும் விடுதி வார்டன் கண்டித்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்ற வார்டன் பிஜேந்திர குமார் முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த சிறுவர்களில் ஒருவன் வார்டனை கதவை திறக்கச் சொல்லி மிரட்டி உள்ளான்.கதவை திறக்க வார்டன் மறுத்ததால் அவரை சுட்டுவிட்டு நான்கு சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ஒரு சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.சிறுவர்களுக்கு துப்பாக்கி மற்றும் இருமல் மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.தப்பிச் சென்ற சிறுவர்களில் ஒருவன் மீது 12 க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன என்றும் ,மற்றொரு சிறுவன் உள்ளூர் ஐக்கிய ஜனதா…
Read Moreவிழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை வெட்டிவிட்டு கார் கொள்ளை
விழுப்புரம்: செப்டம்பர் 20, 2018 மதுரையை சேந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் டேனியல் தனது முதலாளியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் மதுரைக்கு செல்லும்போது தாம்பரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி காரில் எறியுள்ளனர்.கார் விராட்டுக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு கார், செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஆனது .தகவல் அறிந்த காவல் துறையினர் ஓட்டுநரை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில்அனுமதித்து தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Moreஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்
புதுடில்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் மோடி அவர்களின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டது. மூன்று அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஜனாதிபதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு இது கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. இஸ்லாமிய பெண்களின் நன்மைக்காக முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
Read More