செய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்

செய்யாறு: செப்டம்பர் 25, 2018 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் . உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்திற்கு சான்று வழங்கிய பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பார் அசோசியேஷன் அளித்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

செய்யாறு: செப்டம்பர் 25, 2018

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் . உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்திற்கு சான்று வழங்கிய பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பார் அசோசியேஷன் அளித்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

Related posts