கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்

புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார் நான் உங்களை விரைவில் பணக்காரராக மாற்றுகிறேன். இதனை பெரிதும் நம்பிய கிருஷ்ணவேணி கணவருக்கு தெரியாமல் அவ்வப்போது சாமியாருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சிறப்பு பூஜைகளையும், சிறப்பு யாகங்களையும் செய்துள்ளார். இதை அறிந்த அசோக்ராஜீ கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு யாகம், சிறப்பு பூஜைகள் செய்தாலும் பணக்காரராக முடியவில்லையே வறுமை வாட்டுகிறது என சாமியாரிடம் அசோக்ராஜீ கூறி கதறி உள்ளார். இறுதியாக நரபலி கொடுத்தால் செல்வந்தராகிவிடலாம் என சாமியார், அசோக்ராஜூக்கு விபரீத ஆசையை துண்டியுள்ளார் . இதற்காக மனைவியை நரபலி கொடுக்க துணிந்த அசோக்ராஜூ மனைவி கிருஷ்ணவேணியை காளிக்கோயிலுக்கு சாமியாருடன் அனுப்பி வைத்தார். சாமியார், கிருஷ்ணவேணியிடம் உனது கணவருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நீ சிறப்பு பூஜையை செய்தால்தான் அவர் உன்னையே சுற்றி வருவார் என்று கூறி அழைத்து சென்றுள்ளார் . ஏற்கனவே காளிக்கோயிலில் சாமியார் கோவிந்தராஜுக்கு உதவியாக பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர் மற்றொரு நபர் என 3 பேர் அங்கு இருந்துள்ளனர். கிருஷ்ணவேணியை கையில் எலுமிச்சை பழத்தை வைத்தபடி கண்ணை மூடி தியானத்தில் இருக்குமாறு கூறியுள்ளனர். நரபலிக்கு முன்பு கிருஷ்ணவேணியின் கை, கால்களை கட்டுவதற்கு சாமியார் கூறியுள்ளார். அதற்கு ஏன் என்று கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். அதற்கு சாமியார் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது கையில் இருக்கும் எலுமிச்சை பழம் மற்றும் பூஜை பொருட்கள் கீழே விழுந்துவிடும் அதற்காக தான் கட்டுகிறோம் எனக்கூறி கட்டி உள்ளனர்.அப்போது பின்னால் நின்று கிருஷ்ணவேணியை ஆட்டை பலி கொடுப்பது போன்று கத்தியால் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர். கிருஷ்ணவேணியிடம் இருந்த நகைகளை சாமியார் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது . இதையடுத்து கணவர் அசோக்ராஜூ, திருவண்ணாமலை சாமியார் கோவிந்தராஜ, பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர், மற்றொரு நபர் ஆகியோர் போலீஸ்யிடம் சிக்கினர். மனைவிக்கு தெரியாமல் குழந்தைகளை நரபலி கொடுக்கலாம் என முதலில் திட்டம் தீட்டியுள்ளனர், ஆனால் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை சாமியாரிடம் கூறியுள்ளார் . உடனே குழந்தைகளை விட கர்ப்பிணியை நரபலியாக கொடுத்தால் கூடுதல் செல்வமும் சிறப்பும் வந்து சேரும் என ஆசையை தூண்டி உள்ளார் சாமியார் . சாமியார் கோவிந்தராஜை கிருஷ்ணவேணி சித்தப்பா என பாசத்தோடு அழைத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது .

புதுச்சேரி: செப்டம்பர் 22, 2018

புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

உடனே சாமியார் நான் உங்களை விரைவில் பணக்காரராக மாற்றுகிறேன். இதனை பெரிதும் நம்பிய கிருஷ்ணவேணி கணவருக்கு தெரியாமல் அவ்வப்போது சாமியாருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சிறப்பு பூஜைகளையும், சிறப்பு யாகங்களையும் செய்துள்ளார். இதை அறிந்த அசோக்ராஜீ கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு யாகம், சிறப்பு பூஜைகள் செய்தாலும் பணக்காரராக முடியவில்லையே வறுமை வாட்டுகிறது என சாமியாரிடம் அசோக்ராஜீ கூறி கதறி உள்ளார். இறுதியாக நரபலி கொடுத்தால் செல்வந்தராகிவிடலாம் என சாமியார், அசோக்ராஜூக்கு விபரீத ஆசையை துண்டியுள்ளார் . இதற்காக மனைவியை நரபலி கொடுக்க துணிந்த அசோக்ராஜூ மனைவி கிருஷ்ணவேணியை காளிக்கோயிலுக்கு சாமியாருடன் அனுப்பி வைத்தார்.

சாமியார், கிருஷ்ணவேணியிடம் உனது கணவருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நீ சிறப்பு பூஜையை செய்தால்தான் அவர் உன்னையே சுற்றி வருவார் என்று கூறி அழைத்து சென்றுள்ளார் . ஏற்கனவே காளிக்கோயிலில் சாமியார் கோவிந்தராஜுக்கு உதவியாக பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர் மற்றொரு நபர் என 3 பேர் அங்கு இருந்துள்ளனர். கிருஷ்ணவேணியை கையில் எலுமிச்சை பழத்தை வைத்தபடி கண்ணை மூடி தியானத்தில் இருக்குமாறு கூறியுள்ளனர். நரபலிக்கு முன்பு கிருஷ்ணவேணியின் கை, கால்களை கட்டுவதற்கு சாமியார் கூறியுள்ளார். அதற்கு ஏன் என்று கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். அதற்கு சாமியார் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது கையில் இருக்கும் எலுமிச்சை பழம் மற்றும் பூஜை பொருட்கள் கீழே விழுந்துவிடும் அதற்காக தான் கட்டுகிறோம் எனக்கூறி கட்டி உள்ளனர்.அப்போது பின்னால் நின்று கிருஷ்ணவேணியை ஆட்டை பலி கொடுப்பது போன்று கத்தியால் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர்.

கிருஷ்ணவேணியிடம் இருந்த நகைகளை சாமியார் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது . இதையடுத்து கணவர் அசோக்ராஜூ, திருவண்ணாமலை சாமியார் கோவிந்தராஜ, பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர், மற்றொரு நபர் ஆகியோர் போலீஸ்யிடம் சிக்கினர்.மனைவிக்கு தெரியாமல் குழந்தைகளை நரபலி கொடுக்கலாம் என முதலில் திட்டம் தீட்டியுள்ளனர், ஆனால் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை சாமியாரிடம் கூறியுள்ளார் . உடனே குழந்தைகளை விட கர்ப்பிணியை நரபலியாக கொடுத்தால் கூடுதல் செல்வமும் சிறப்பும் வந்து சேரும் என ஆசையை தூண்டி உள்ளார் சாமியார் . சாமியார் கோவிந்தராஜை கிருஷ்ணவேணி சித்தப்பா என பாசத்தோடு அழைத்து வந்துள்ளார் .

Related posts