காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்

காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடந்த அன்று மதியம் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சுப்ரமணியனுடன் பலியான மற்றொரு தமிழக வீரர் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடந்த அன்று மதியம் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சுப்ரமணியனுடன் பலியான மற்றொரு தமிழக வீரர் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts