சென்னை: செப்டம்பர் 22, 2018
சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி வாணி (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். அதனால் வாணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற வாணியிடம்குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் அருகில் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய வாணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் வாணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்
- செய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்
- உ.பி.,யில் வேகமாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: உ.பி.,யில் வேகமாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்
அடுத்த செய்தி →: கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்

