விழுப்புரம்: செப்டம்பர் 20, 2018
மதுரையை சேந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் டேனியல் தனது முதலாளியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் மதுரைக்கு செல்லும்போது தாம்பரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி காரில் எறியுள்ளனர்.கார் விராட்டுக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு கார், செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஆனது .தகவல் அறிந்த காவல் துறையினர் ஓட்டுநரை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில்அனுமதித்து தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.