பாட்னா: செப்டம்பர் 20, 2018
பீகாரின் புர்னியே பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்காக தொடர்ந்து இருமல் மருந்துகளை சாப்பிட்டு வந்த ஐந்து சிறுவர்களையும் விடுதி வார்டன் கண்டித்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்ற வார்டன் பிஜேந்திர குமார் முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த சிறுவர்களில் ஒருவன் வார்டனை கதவை திறக்கச் சொல்லி மிரட்டி உள்ளான்.கதவை திறக்க வார்டன் மறுத்ததால் அவரை சுட்டுவிட்டு நான்கு சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ஒரு சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.சிறுவர்களுக்கு துப்பாக்கி மற்றும் இருமல் மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.தப்பிச் சென்ற சிறுவர்களில் ஒருவன் மீது 12 க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன என்றும் ,மற்றொரு சிறுவன் உள்ளூர் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரின் மகன் என்றும் கூறப்படுகிறது.