புதுடில்லி :
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
டில்லியில் மோடி அவர்களின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டது. மூன்று அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஜனாதிபதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்லாமிய பெண்களுக்கு இது கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. இஸ்லாமிய பெண்களின் நன்மைக்காக முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.