விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது. இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .
Read MoreYear: 2018
சென்னையில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து..
சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் . பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர். பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில்…
Read Moreதாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்து பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreசேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது.
சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆத்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் அரசு பள்ளி அருகே சுற்றித் திரிந்தார் . பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார். மொழி புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று அந்த மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு அடைத்தார். இதை பார்த்த சிலர் மூதாட்டியை விரட்டி பிடித்து ,சாக்குப்பையில் உள்ள சிறுவனை கண்டதும் மூதாட்டியை சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் அந்த மூதாட்டியை கைது செய்தனர்.…
Read Moreஇளையராஜா ராயல்டி கேட்பது தவறு:எஸ்.ஏ. சந்திரசேகர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் . தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
Read Moreநடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு…
Read Moreவழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை
கான்பூர் :அக்டோபர் 25, 2018 உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் 2013 ம் ஆண்டு மே 30 ம் தேதியன்று மூடப்பட்டது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது.அந்த வழக்கை நீதிபதி சமரசம் செய்து தீர்ப்பு வழங்கினார்.இதனால் கடையை மீண்டும் திறக்க தீர்மானக்கப்பட்டது. இந்நிலையில் பூட்டப்பட்ட கடையை திறந்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையில் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடையில் இருந்த 10,000 காரட் வைரங்கள், 500 கிலோ வெள்ளி, 100 கிலோ தங்கம், 5000 காரட் மதிப்புடைய நகைகள், தொழில் தொடர்பான சில ஆவணங்களையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது . இதை பற்றி போலீசில்புகார் கொடுக்கப்பட்டது . இதை வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.சம்மந்தப்பட்ட…
Read Moreமாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018 ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர். வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Read Moreகுரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி
பாக்பத்:அக்டோபர் 20, 2018 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.
Read More500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
கர்னூல்:அக்டோபர் 19, 2018 ராஜ்குமார்(33) என்பவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் .அவர் வழுக்கை ஆனால் விக் வைத்து பேஸ்புக்கில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்தார் .தன்னை இளமையாக கட்டிக்கொண்டார் . அவர் பெண்களை கவரும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக்கில் போடுவது வழக்கம் .ஒவ்வொரு பெண்ணாக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.பணக்கார வீட்டு பெண்களிலிருந்து உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை விட்டுவைக்கவில்லை. ஒரு துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுப்பது வழக்கம் . பிறகு அவர்களிடம் இருந்து பணம் அல்லது நகை வாங்க முயற்சிசெய்வார் , கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பி விடுவாராம். ராஜ்குமார் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் பணத்தை தர முடியவில்லை ,அதனால் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில்…
Read More