மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.

திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018 ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர். வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read More