சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் .
பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.
பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்.6 வாக்குப்பதிவு, பரப்புரை தீவிரம்
- தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!
அடுத்த செய்தி →: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி…

